Tamil » Movies » Vanakkam Chennai » User Reviews

Vanakkam Chennai (U)

Genre

Comedy - Romance

User Review

Release Date

11 Oct 2013
By :

On : 2013-10-11 14:53:41

நிச்சயம் செய்யப்பட்ட பெண் புதிதாக ஒருவனை சந்திக்கிறாள், பழகுகிறாள், பின் அவளது மனப் போராட்டம் என நாம் பார்த்து புளித்து போன கதைக்கரு தான் இந்த திரைப்படத்துடையதும். இதில் நல்ல இசை, நகைச்சுவை என நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

கதாநாயகனாக சிவா, மற்ற படங்களை காட்டிலும் நிச்சயமாக நடிக்க முயற்சி செய்துள்ளார். கண்டிப்பாக வேறு ஒரு நடிகரை தேர்வு செய்துருக்கலாம். கதாநாயகியாக பிரியா ஆனந்த், முந்தைய படத்தை விட இதில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு, எத்தனை படத்தில் தான் நாம் சந்தானம் நாயகர்களுக்கு காதல் யோசனைகளை சொல்வது போல் பார்ப்போமோ தெரியவில்லை.

அனிரூத்தின் பாடல்களும் பின்னணி இசையும் தான் படத்தை தாங்கி பிடிக்கிறது. "ஒ பெண்ணே பெண்ணே", "எங்கடி பொறந்த" பாடல்கள் படமாக்கிய விதம் அருமை. . அனைத்து பாடலாசிரியர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். இவற்றை தவிர கலை மற்றும் ஆடை வடிவமைப்பு துறை கவனிக்க வைக்கிறது.

Story:
Acting:
Direction:
Movie Rating: