twitter
    bredcrumb

    இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று

    By Mohana Priya
    | Published: Monday, July 12, 2021, 11:46 [IST]
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக சுதா அறிவித்துள்ளார்.
    இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று
    1/7
    உலக அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்ற சூர்யா நடித்த சூரரை போற்று படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். 
    இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று
    2/7
    தற்போது இந்த படத்தை சுதாவே இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். சூர்யாவின் 2 டி என்டர்டைன்மென்ட் மற்றும் அபுதான்தியா என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளன.
    இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று
    3/7
    ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சூரரை போற்று படம் உலக அளவில் ஐஎம்டிபி.,யின்  ரேட்டிங்கில் 3 வது இடத்தை பெற்றது. இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் சூரரை போற்று பெற்றுள்ளது.
    இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று
    4/7
    இந்த படத்தில் மாறா என்ற நெடுமாறன் ராஜாங்கம் கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். சாமானிய மக்களையும் விமானத்தின் சர்வ சாதாரணமாக பயணம் செய்ய வைக்கும் முயற்சி தான் படத்தின் கதை.
    இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று
    5/7
    78 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் திரையிடப்பட்ட சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களின் டாப் 10 பட்டியலில் சூரரை போற்று படம் இடம்பெற்றிருந்தது. ஆஸ்கார் போட்டிக்கும் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது.
    இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று
    6/7
    சூர்யா நடித்த மாறா கேரக்டரில் இந்தியில் யார் நடிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சுதாவின் தேர்வு சூர்யாவாக இருந்தாலும் சூரரைப் போற்று ரீமேக் மூலம் சூர்யா பாலிவுட்டில் நுழைய வாய்ப்புள்ளது.
    இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று
    7/7
    இருப்பினும் அதிக ரீமேக் படங்களில் நடித்ததால் அஜய் தேவ்கன் பெயர் தான் முதலில் பரிந்துரைக்கப்படுகிறது. இவர் தவிர ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான் ஆகியோர் பெயர்களும் மாறா கேரக்டரில் நடிக்க அடிபடுகிறது. தமிழுக்கு கிடைத்த அதே வரவேற்பும், ஆதரவும் இந்தி ரீமேக் சூரரை போற்று படத்திற்கும் கிடைக்கும் என சுதா கொங்கரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X